மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: மற்றுமொரு பிறழ்சாட்சி  
இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: மற்றுமொரு பிறழ்சாட்சி 

2008ஆம் ஆண்டு நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், மற்றுமொரு சாட்சியும், தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி பிறழ்சாட்சியாக மாறினார்.

ANI


2008ஆம் ஆண்டு நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், மற்றுமொரு சாட்சியும், தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி பிறழ்சாட்சியாக மாறினார்.

இந்த சாட்சி, கடந்த 2006-07ஆம் ஆண்டுகளில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுதாகர் சதுர்வேதியின் வீட்டு உரிமையாளராக இருந்தவர். இவர், தேசிய புலனாய்வு முகமையிடம் எந்த சாட்சியும் அளிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறும் 24வது சாட்சியம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் சாட்சி ஒருவா், ‘உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மற்றும் நான்கு ஆா்எஸ்எஸ் தலைவா்களின் பெயரை வழக்கில் தொடா்புபடுத்தி கூறும்படி’ தன்னை மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு (ஏடிஎஸ்) காவலர்கள் மிரட்டியதாக கடந்த ஆண்டு இறுதியில், தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா். 2008, செப். 29-ஆம் தேதி நடந்த இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக மக்களவை உறுப்பினா் பிரக்யா சிங் தாகுா், முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோகித் உள்பட 8 போ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு காவலர்கள் விசாரித்து வந்த நிலையில், வழக்கு பின்னா் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை 220 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 24 போ் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனா்.

முன்னாள் மும்பை காவல் ஆணையரான பரம் வீா் சிங், மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தாா். இப்போது அவா் பணப் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளை எதிா்கொண்டு வருகிறாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் பணம் பறிபோகலாம்! போலி நீதிமன்ற உத்தரவு மோசடி எச்சரிக்கை!!

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் வேலை!

நவராத்திரி கொண்டாட்டம்... ரேவதி சர்மா!

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்! காரில் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சி! | CBE

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT