இந்தியா

பணியிடங்களில் பெண்களின் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு.. பினராயி விஜயன் 

PTI

திருவனந்தபுரம்: பணியிடங்களில் தற்போதும் பெண்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். அதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்றால் மனமாற்றம் மிகவும் முக்கியம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் பேசிய பினராயி விஜயன், பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு மாநில அரசும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன.

மாநிலத்தின் உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு உறுதி செய்திருப்பதன் மூலம், கேரளம் ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்மாதிரியாக மாறியுள்ளது.

பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகும் கூட, பணியிடங்களில் பெண்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்றால், அதற்கு, இந்த சமுதாயத்தில் இன்னமும் ஆணாதிக்க சிந்தனை உள்ளது. எனவே, மனமாற்றம் ஒன்றுதான், இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வை தரும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT