இந்தியா

ஆன்மிகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது: பிரதமர் மோடி

ஆன்மிகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

DIN

ஆன்மிகமும் மருத்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹாரியானா பரிதாபாத்தில் அம்ரிதா மருத்துவமனையை தொடக்கிவைத்த பின் பிரதமர் மோடி பேசினார்.

நவீனம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவை மூலம் சுகாதாரத் துறை நாட்டை வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அம்ரிதா மருத்துவமனை 2,500 படுக்கை வசதிகள் உள்ள  சுமார் ரூ.6000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்டோர் அமிர்தா மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு சென்றார்

இதையடுத்து, பரிதாபாத்தில் திறப்பு விழாவைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மொஹாலிக்குச் சென்று,  முல்லன்பூரில், நியூ சண்டிகர், சாஹிப்சாதா அஜித் சிங் நகர் மாவட்டத்தில் (மொஹாலி) 'ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை' நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் டாடா மெமோரியல் சென்டரால் 600 கோடி ரூபாய் செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

புற்றுநோய் மருத்துவமனையானது 300 படுக்கைகள் கொண்ட ஒரு மூன்றாம் நிலை மருத்துவமனையாகும். மேலும் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் மெடிக்கல் ஆன்காலஜி - கீமோதெரபி, இம்யூனோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை போன்ற அனைத்து சிகிச்சை முறைகளும் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT