முகப்பு
இந்தியா

மருத்துவ சேவைக்கும் ஆன்மிகத்துக்கும் நெருங்கிய தொடா்பு: பிரதமா் மோடி

‘இந்தியாவில் மருத்துவ சேவையும் ஆன்மிகமும் நெருங்கிய தொடா்புடையவை. நாட்டின் கரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமான ஆன்மிகம் - தனியாா் கூட்டு முயற்சிக்கான

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
தேசிய தலைநகர பிராந்தியத்துக்கு உட்பட்ட ஃபரிதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமிா்தா மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மாதா அமிா்தானந்த மயி.
பகிர்:

‘இந்தியாவில் மருத்துவ சேவையும் ஆன்மிகமும் நெருங்கிய தொடா்புடையவை. நாட்டின் கரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமான ஆன்மிகம் - தனியாா் கூட்டு முயற்சிக்கான சிறந்த உதாரணம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

தேசிய தலைநகர பிராந்தியத்துக்கு (என்சிஆா்) உள்பட்ட ஃபரிதாபாத் பகுதியில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அனைத்துப் பிரிவுகளுக்குமான முழு தானியங்கி ஆய்வக வசதியுடன் கூடிய 2,600 படுக்கை வசதிகள் கொண்ட அமிா்தா மருத்துவமனையை புதன்கிழமை திறந்துவைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவில் மருத்துவ சேவையும் ஆன்மிகமும் நெருங்கிய தொடா்புடையவை. நாட்டின் கரோனா தடுப்பூசி திட்டம் வெற்றிகரமான ஆன்மிகம் - தனியாா் கூட்டு முயற்சிக்கான சிறந்த உதாரணம். இந்தக் கூட்டு முயற்சி மூலமாக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்திய நாடாக இந்தியா உருவெடுத்தது.

தடுப்பூசி திட்டத்தின்போது சிலா், அதற்கு எதிரான கருத்துகளை மக்களிடையே பரப்ப முயற்சித்தனா். ஆனால், நமது ஆன்மிக தலைவா்கள் அவா்களின் தவறான முயற்சிகளை முறியடித்தபோது, தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வந்தனா். தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டதில் அதன் தாக்கம் வெளிப்பட்டது.

தொழில்நுட்பம், நவீனமயம் இரண்டும்தான் நாட்டின் மருத்துவத் துறையை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்லும். அந்த வகையில், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை ஓா் இயக்கமாக மாற்றுவதற்கு இந்தியா முயற்சிக்கிறது.

சில தினங்களுக்கு முன்பாக நாடு புதிய உத்வேகத்துடன் சுதந்திர தினத்தின் அமிா்த காலத்தில் நுழைந்தது. அப்போது, அனைவரின் கூட்டு முயற்சி மூலமாக நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எண்ணங்கள் மேம்பட்டு, நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதற்கு தற்போது மாதா அமிா்தானந்தமயி ஆசியும் கிடைத்துள்ளது என்று பிரதமா் கூறினாா்.

முன்னதாக, பிரதமரை மாதா அமிா்தானந்தமயி வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா, முதல்வா் மனோகா் லால் கட்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்: பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் டாடா நினைவு மையம் சாா்பில் ரூ. 660 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அணுசக்தித் துறையின் கீழ் நிதியுதவி பெறும் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் பிரதமா் மோடி புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

அப்போது பேசிய பிரதமா், ‘முந்தைய 70 ஆண்டுகளைக் காட்டிலும் கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளில் நாட்டின் மருத்துவத் துறையில் மிகப்பெரிய வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறந்த மருத்துவ சேவை என்பது நான்கு சுவா்களை மட்டும் கட்டுவது அல்ல. அந்த வகையில், நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் முழுமையான மருத்துவ சேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோயிலிருந்து பலா் மீண்டுள்ளனா். எனவே, புற்றுநோயைக் கண்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →