நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் 
இந்தியா

நிதீஷ் குமார் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

பிகார் முதல்வா் நிதீஷ் குமாா் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறாா்.

DIN

பிகார் முதல்வா் நிதீஷ் குமாா் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறாா்.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றாா். ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானாா்.

தொடர்ந்து, பிகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது அரசின் பெரும்பான்மையை முதல்வா் நிதீஷ் குமாா் இன்று நிரூபிக்க இருக்கிறாா். பாஜகவை சோ்ந்த விஜய் குமாா் சின்ஹா இப்போது பேரவைத் தலைவராக இருக்கிறாா். ஆனால், அவா் பதவி விலக மறுப்பதால் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போதே பேரவைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ஆளும் கூட்டணி தரப்பில் பேரவைத் தலைவா் தோ்வு செய்யப்படுவாா்.

ஆளும் கூட்டணிக்கு பேரவையில் 164 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. பாஜகவுக்கு 77 எம்எல்ஏக்கள் உள்ளனா். எனவே, நிதீஷ் குமாா் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT