இந்தியா

ரயில்வேயில் பயணிகளின் கட்டண சலுகைக்காக ரூ 62 ஆயிரம் கோடி செலவு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

DIN

பிஜ்னோர் (உத்தரப்பிரதேசம்): ரயில்வே தனது பயணிகளுக்கு 55 சதவீதம் சலுகை அளித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு வகை பயணிகளுக்கான ரயில் கட்டண சலுகைக்காக ரூ.62 ஆயிரம் கோடி செலவிட்டதாகவும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோருக்கு வந்த அமைச்சர், “ரயில்வேக்கு ரூ. 100 செலவாகிறது என்றால், வெறும் ரூ. 45 மட்டுமே பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது” என்றார். 

கடந்த ஆண்டு, ரயில்வே பல்வேறு வகை பயணிகளுக்கான ரயில் கட்டண சலுகைக்காக மொத்தம் ரூ.62 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 

புதிய ரயில்களுக்கான திட்டங்கள் குறித்து கேள்விக்கு, மின்சார ரயில்கள் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாகவும், அவை என்ஜின் இல்லாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது பெட்டியில் இருந்து இயக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது என வைஷ்ணவ் தெரிவித்தார். 

மேலும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (பிஎஸ்என்எல்) 5ஜி சேவை அக்டோபரில் தொடங்கும் என்றும், அடுத்த 500 நாள்களில் நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் இந்த சேவையை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த அரசு ரூ. 1.64 லட்சம் கோடி வழங்கியுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருக்கும் வைஷ்ணவ் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT