அசாதுதீன் ஓவைசி (கோப்புப் படம்) 
இந்தியா

பாஜகவினரின் சர்ச்சைப் பேச்சு: இதுவே கடைசியாக இருக்க வேண்டும் -ஓவைசி

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்: அசாதுதீன் ஓவைசி 

DIN

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி  அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்

தெலங்கானாவில் கோஷாமால் தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ராஜா சிங், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பேசி விடியோ ஒன்றை பதிவிட்டார். 

இந்த விடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மாவின் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டதாகக் கூறி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜா சிங்கை தெலங்கானா காவல் துறையினர் கைது செய்தனர்.  எனினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் இது குறித்து பேசிய ஹைதராபாத் எம்.பி. ஓவைசி, ராஜா சிங்கை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்வதாக அறிவித்தது. மாநில அரசும், காவல் துறையும் பிரச்னைகளை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர் அவதூறாகப் பேசி விடியோ பதிவிட்டுள்ளார். இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து ராஜா சிங் மீது கடும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுவே எங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. 

ராஜா சிங்கை காவல் துறையினர் தங்கள் காவலில் எடுக்க வேண்டும். அவரது குரலை ஆய்வுக்கு உட்படுத்தி விடியோவில் பேசியதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்த வேண்டும். இதன் மூலம் ராஜா சிங் மீதான குற்றச்சாட்டு வலுவடையும். இது போன்று முட்டாள் தனமாக பேசுவது இதுவே அவர்களுக்கு கடைசியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

SCROLL FOR NEXT