முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 10,725 பேருக்கு கரோனா; மேலும் 13,084 மீண்டனர்

நாட்டில் ஒரேநாளில் 10,725 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13,084 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
கோப்புப் படம்
பகிர்:

நாட்டில் ஒரேநாளில் 10,725 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13,084 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,725 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,43,78,920 ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 94,047 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.21 சதவீதமாக உள்ளது. 

மேலும் 36 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,27,488 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவிலிருந்து மேலும் 13,084 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,37,57,385 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.60 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2,10,82,34,347 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.  ஒரே நாளில் புதன்கிழமை மட்டும் 23,50,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.