முகப்பு
இந்தியா

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
ஓ.பன்னீா்செல்வம்
பகிர்:

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். 

'கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. தமிழக மீனவர்களை அச்சமடையச் செய்யும் நோக்கில் இலங்கை கடற்படையினர் இவ்வாறு செய்து வருகின்றனர். 

இதனால் தமிழக மீனவர்களின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை இருக்கிறது. இலங்கை கடற்படையின் செயல்களால் தமிழக மீனவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த 10 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →