முகப்பு
இந்தியா

‘காங்கிரஸ் கட்சி சீர்குலைவது வேதனையாக உள்ளது’: உமர் அப்துல்லா

நாட்டின் பழமையான கட்சி சீர்குலைவது வேதனையளிப்பதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
உமர் அப்துல்லா
பகிர்:

நாட்டின் பழமையான கட்சி சீர்குலைவது வேதனையளிப்பதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான குலாம்நபி ஆசாத் அக்கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகியதுடன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ராஜிநாமா செய்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர் எழுதியுள்ள கடிதத்தை படிப்பது வலிமிகுந்ததாக உள்ளது. நாட்டின் பழமையாக கட்சி சீர்குலைவதைப் பார்ப்பதற்கு கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →