இந்தியா

அரசு ஊழியர்கள் தங்களின் சொத்துகளை அறிவிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசு அதிரடி உத்தரவு 

DIN

திரிணமூல் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மேற்கு வங்க அரசு அதிகாரிகள் தங்களின் சொத்துகளை குறிப்பிட்ட காலத்திற்குள் அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அரசு அதிகாரிகள் தங்களின் சொத்துகளை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும, இந்த விதி சில காலமாக இருந்தாகவும், அரசு அதிகாரிகள் இதை முறையாக பின்பற்றவில்லை என கூறப்படுதிறது.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் மற்றும் அரசு அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மீண்டும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த இரண்டு மாதங்களில், பல உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அரசு நிறுவனங்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

சிபிஐ தொடர் ஆய்வுக்கு மத்தியில், மேற்கு வங்க அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் மற்றும் அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அதிகாரிகள் தங்கள் சொத்துக்களின் விவரங்களை அரசுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT