மகாராஷ்டிரத்தின் பைதன் மாவட்டத்தில் பொது இடத்தில் ஒரே ஆண் நண்பருக்காக இரு இளம் பெண்கள் அடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
17 வயது நிரம்பிய இரண்டு இளம் பெண்கள் பொது இடத்தில் சண்டையிட்டுக் கொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அதிமுகவில் இணைந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்
இந்த சம்பவம் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 24) காலையில் பைதன் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட மற்றொரு இளம் பெண் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அந்த பெண் வந்த சிறிது நேரத்திலேயே அவர்களுக்குள் வாக்குவாதம் தொடங்கி விட்டது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் அடிபுடி சண்டையாக மாறியது. பேருந்து நிலையம் என்று கூட பார்க்காமல் அந்த இரு பெண்களும் சண்டையிட அந்த ஆண் நண்பர் பேருந்து நிலையத்தை விட்டு நழுவி தப்பிச் சென்றார்.
இதையும் படிக்க: குஜராத் தேர்தலை மனதில் வைத்தே சிபிஐ சோதனை: அரவிந்த் கேஜரிவால்
இதையடுத்து, அந்த இரு இளம் பெண்களும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், காவல் துறையினர் அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.