முகப்பு
இந்தியா

ஜம்மு எல்லையில் ஊடுருவிய நபர் கைது

ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவிய நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தது. 

Updated On : 27 ஆகஸ்ட், 2022 at 12:23 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:40 PM

ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவிய நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தது. 

ஜம்மு மாவட்டத்தில் உள்ள தேசிய எல்லையில் அர்னியா செக்டரில் இன்று சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் கவனித்து வந்தனர். 

இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஊடுருவிய நபர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டவர் சியால்கோட்டில் வசிக்கும் 45 வயதான முஹம்மது ஷபாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்எப் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.