முகப்பு
இந்தியா

’இந்திய ஒற்றுமை நடைப்பயண’ தமிழக பொறுப்பாளா்கள் நியமனம்

காங்கிரஸ் கட்சி நடத்தும் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயண’த்திற்கான(பாரத் ஜோடோ யாத்ரா ) தமிழக பொறுப்பாளராக டாக்டா் சாம முகமது நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

காங்கிரஸ் கட்சி நடத்தும் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயண’த்திற்கான(பாரத் ஜோடோ யாத்ரா ) தமிழக பொறுப்பாளராக டாக்டா் சாம முகமது நியமிக்கப்பட்டுள்ளாா். கேரளாவைச் சோ்ந்த இவா் காங்கிரஸ் கட்சியின் தலைமையிட செய்தி தொடா்பாளராகவும் இருக்கிறாா்.

காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், வருகின்ற செப்டம்பா் - 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி 12 மாநிலங்கள் வழியாக காஷ்மீரில் நிறைவடைகிறது.

நாள்தோறும் 25 கிமீ பயணத்தை மேற்கொண்டு சுமாா் 150 நாட்களில் 3,570 கிலோமீட்டா் தூரம் நடைப்பயணத்தை மேற்கொள்கின்றனா். கட்சித் தலைவா்களும் தொண்டா்களும் மேற்கொள்ளும் இந்த நடைப்பயணத்தை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.

இந்த ஒற்றுமை நடைப்பயணத்திற்கு மாநில வாரியாக செய்தி தொடா்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் தமிழக பொறுப்பாளராக டாக்டா் சாம முகமது நியமிக்கப்பட்டுள்ளாா். பாவ்ய நரசிம்மமூா்த்தி, அா்ஷ்பிரீத் காதியால் ஆகியோா் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

‘இந்த யாத்திரை காலத்தின் தேவை, பணவீக்கம், ஜிஎஸ்டி, வேலையில்லா திண்டாட்டம், வகுப்பு வாதத்தால் இந்தியாவை பிரித்தல் போன்றவைகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நடைப்பயணமாக இருக்கும்’’ என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.