இந்தியா

சோனாலி போகாட் மரணம்: கைதான முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு 10 நாள்கள் போலீஸ் காவல்

DIN

சோனாலி போகாட் மரண வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் 2 பேரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோருடன் ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் புகழ் நடிகையுமான சோனாலி போகாட் (42) கடந்த 22-ஆம் தேதி கோவா வந்திருந்தாா். வடக்கு கோவாவில் உள்ள ஹோட்டலில் அவா் தங்கியிருந்தாா். அவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 23-ஆம் தேதி அதிகாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே இறந்துவிட்டாா் என்று தெரிவித்தனா். அவா் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. எனினும், சோனாலி போகாட்டின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினா்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, போகாட்டுடன் வந்திருந்த சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். 

இந்நிலையில், சோனாலி போகாட்டுக்கு குடிநீரில் விஷம் கலந்து கொடுத்ததாக அவா்கள் இருவரும் ஒப்புக் கொண்டதாக கோவா காவல் துறை ஐ.ஜி. ஓம்வீா் சிங் பிஸ்னோய் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதனிடையே இவ்வழக்கில் மேலும் 2 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இத்துடன் இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளான சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோரை காவல்துறையினர் கோவா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது இருவரையும் 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT