இந்தியா

பஞ்சாப்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை

பஞ்சாப் மாநிலம், பாம் கிராமத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பஞ்சாப் மாநிலம், பாம் கிராமத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலிஜித் சிங் காக் கூறுகையில், 

கியாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அதில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளையடித்தது தெரிய வந்தது. கொள்ளையர்கள் காரில் வந்த தடயங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் அதிகாலை 2.40 மணியளவில் நடந்ததாகவும், கொள்ளையர்கள் சுமார் ரூ17 லட்ச பணத்தை எடுத்துச் சென்றதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பாம் கிளை) உதவி மேலாளர் ஜஸ்வீர் சிங் கூறினார். 

சப்பேவால் காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொள்ளையர்களைத் தேடி வருவதாகவும் அவர்  கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

‘விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்’

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT