நாட்டில் புதிதாக 9,436 பேருக்கு கரோனா: 157 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,436 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 157 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாநாட்டில் புதிதாக 9,436 பேருக்கு கரோனா: 157 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,436 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 157 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,436 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 157 பேர் உயிரிழந்தனர்.
நேற்று (சனிக்கிழமை) தொற்று பாதிப்பு எண்ணிக்கை 9,520 ஆக இருந்தது. இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,436பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,44,08,132 ஆக அதிகரித்துள்ளது
நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 86,591 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.19 சதவீதமாக குறைந்துள்ளது.
கரோனா தொற்று பாதித்தவர்களில் புதிதாக 157 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,27,754 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.