இந்தியா

நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்

DIN

நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வுக்குத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1 ஆம் தேதி வெளியானது. 

தொடர்ந்து, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாளை வெளியிடாத மருத்துவ தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை பட்டியலிட மனுதாரர் கோரினர். 

இந்த விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை என  தெரிவித்துள்ளது.

மேலும் 'மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் கொண்டு செல்ல விரும்பவில்லை. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். திட்டமிட்டபடி கலந்தாய்வு நடக்கட்டும், அதனை நிறுத்த வேண்டாம்' நீதிபதி சந்திரசூட் அமர்வு கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT