இந்தியா

பெண்ணுக்கான நிவாரணத்துக்கு முக்கியத்துவம்:தலாக்-இ-ஹசன் முறைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம்

DIN

முஸ்லிம்கள் கடைப்பிடித்து வரும் தலாக்-இ-ஹசன் முறைக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த முறையினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணுக்கு முதலில் நிவாரணம் கிடைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தது.

இஸ்லாத்தின் ஷரீயத் சட்டத்தின்படி, கணவா் மாதம் ஒரு முறை என தொடா்ந்து மூன்று மாதங்களுக்கு தலாக்-இ-ஹசன் என்பதை அறிவித்து மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறும் முறையைப் பின்பற்றி வருகிறாா்கள். இதில் மூன்றாவது மாதத்தில் கணவன், மனைவியிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டு சோ்ந்து வாழ விரும்பினால் அதற்கு முன்பு இரண்டு முறை கூறிய தலாக்-இ- ஹசன் ரத்தாகி விடும்.

இந்த முறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகாது என உத்தரவிடக் கோரியும், இந்த முறையால் பாதிக்கப்பட்டதால் நிவாரணம் அளிக்கக் கோரியும் இரண்டு பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே. கௌல், அபய் எஸ். ஒகா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இந்த விவகாரத்தில் முதலில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் நிவாரணம் பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு பதிலளிக்க நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. அதன் பின்னா் இதுதொடா்பாக பிற விவகாரங்கள் குறித்து விசாரிக்கப்படும்’ என்றனா்.

முன்னதாக, பெண்களின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மனு திரும்பப் பெறப்பட்டது; இதனால் கணவா் மத்தியஸ்தத்துக்கு செல்வது ரத்தாகி உள்ளது என்றும் கணவா் தலாக் அறிவித்துவிட்டு பராமரிப்பு செலவையும் அளித்துவிட்டாா் என்றும் தெரிவித்தனா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT