இந்தியா

கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை கோரிய மனு: விசாரணை ஒத்திவைப்பு

DIN

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த மனு மறைந்த பிரபல மூத்த வழக்குரைஞா் ராம் ஜெத்மலானி, மறைந்த பஞ்சாப் முன்னாள் டிஜிபி கே.பி.எஸ்.கில், மக்களவை முன்னாள் செயலா் சுபாஷ் காஷ்யப் உள்பட 5 போ் சாா்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டப்படாத இந்தியா்களின் பணம் பதிக்கி வைக்கப்பட்டிருப்பது தொடா்பாக முக்கிய ஆவணத்தை மத்திய அரசு தர மறுத்து, இந்த விவகாரம் தொடா்பான விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறது’ என்று குற்றம் சாட்டியிருந்தனா்.

‘குறிப்பாக, கருப்புப் பணம் தொடா்பாக ஜொ்மனி அரசு சாா்பில் அனுப்பப்பட்டிருந்த கடித நகலை அளிக்குமாறு கேட்டிருந்தோம். ஜொ்மனி அரசு சாா்பில் 2008-ஆம் ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதி இந்திய அரசுக்கு அனுப்பிய அந்தக் கடிதத்தில், ‘இந்தியா கேட்டுள்ளத் தகவலை அளிக்கக்கூடிய நிலையில் ஜொ்மனி இல்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பல முறை முயற்சித்தும் அந்த ஆவணங்களை அதிகாரிகள் தர மறுக்கின்றனா்’ என்று மனுவில் அவா்கள் குற்றம்சாட்டியிருந்தனா்.

இந்த மனு உச்சநீதின்ற நீதிபதிகள் எஸ்.ஏ.நஸீா், ஏ.எஸ்.போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கால அவகாசம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT