கோப்புப் படம் 
இந்தியா

கர்ப்பப்பை புற்றுநோய்: இந்தியாவின் முதல் தடுப்பூசி நாளை அறிமுகம்

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக இந்தியாவில் முதல்முறை உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. 

DIN

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக இந்தியாவில் முதல்முறை உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி நாளை அறிமுகப்படுத்தப்படுகிறது. 

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனமும் இணைந்து இந்தத் தடுப்பூசியை அறிமுகம் செய்கிறது.

இது தொடர்பாக பேசிய நீதி ஆயோக்கின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்காக இந்தியாவிலேயே தடுப்பூசி உருவாக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இதனை அறிமுகம் செய்வது மகிழ்ச்சியான அனுபவம். இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்வதன் மூலம் நமது மகள்களும், பெண்களும் மகிழ்ச்சி அடைவார்கள். நீண்ட நாள்களாக காத்திருந்த தடுப்பூசி அவர்களுக்கு கிடைக்கவுள்ளது. 

இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட தடுப்பூசி தேவைகளிலேயே இது மிகப்பெரியது. 85 முதல் 90 சதவிகிதம் பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது குறிப்பிட்ட நுண்கிருமியால் ஏற்படுகிறது. இந்த தடுப்பூசி கொண்டு அந்த நுண் கிருமிதொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

SCROLL FOR NEXT