மதிப்பெண் குறைவு: ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்துத் தாக்கிய மாணவர்கள்
குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில், சமீபத்தில் தேர்வு நடைபெற்றுள்ளது.
அதில், செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண்களை வழங்கியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதற்கு சரியாக பதிலளிக்காததால் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதலில், காயமடைந்த ஆசிரியர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.