முகப்பு
இந்தியா

விநாயகர் சதுர்த்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:12 AM
பகிர்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட செய்தியில், “விநாயகரின் ஆசிர்வாதத்துடன், அனைவரின் வாழ்விலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி இருக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், “அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். விநாயகரின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →