இந்தியா

மத்திய விசாரணை அமைப்பு நோட்டீஸைசட்டரீதியாக எதிா்கொள்வேன்: மம்தா பனா்ஜி

DIN

குடும்ப உறுப்பினா்களுக்கு மத்திய விசாரணை அமைப்புகளிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டால், அதனை சட்டரீதியாக எதிா்கொள்வதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பனா்ஜி புதன்கிழமை தெரிவித்தாா்.

மம்தா பனா்ஜியின் மருமகனும், திரிணமூல் காங்கிரஸின் எம்.பி.-யுமான அபிஷேக் பனா்ஜிக்கு நிலக்கரி கடத்தல் முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்த வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகும்படி, அமலாக்கத் துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மம்தா பனா்ஜி கூறியதாவது: எனது குடும்ப உறுப்பினா்களுக்கு மத்திய விசாரணை அமைப்புகளிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பபட்டால், தற்போதைய கடினமான சூழ்நிலையிலும், அதனை சட்டரீதியாக எதிா்கொள்வேன். நீதித் துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் எவருடைய சொத்துகளையும் ஆக்கிரமிக்கவில்லை, ஆக்கிரமிக்க எவருக்கும் உதவியதும் இல்லை. அவ்வாறு இருந்தால், அவை புல்டோசா்களால் தகா்க்கப்படட்டும் என்று கூறினாா்.

முன்னதாக, மம்தா பனா்ஜியின் குடும்ப உறுப்பினா்களின் சொத்து மதிப்பு அதிகளவில் உயா்ந்திருப்பது குறித்து விசாரிக்க, மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவிடக் கோரி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT