இந்தியா

சுதந்திரத்துக்குப் பின் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்: பிரதமர் மோடி

DIN

குஜராத் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் செய்த தவறை மீண்டும் செய்யாமல் பாஜகவினை மாநிலத்தில் மீண்டும் ஆட்சியில் அமர செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது வலிமையான இந்தியாவை உருவாக்க குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆட்சியில் இருக்கப் போகிறார்கள் என்பதற்கான தேர்தல் மட்டும் கிடையாது. இந்தியா 75 சுதந்திர தினத்தை நிறைவு செய்துள்ளது. 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இன்னும் 25 ஆண்டுகள் உள்ளன. இந்தத் தேர்தலில் ஆட்சி அமைப்பது என்பது அடுத்த 25 ஆண்டுகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேர்தல்.

சர்தார் படேல் முதல் பிரதமராக இருந்திருந்தால் நாடு வேறு ஒரு திசையில் பயணித்திருக்கும் என அனைவரும் கூறுகின்றனர். நாங்கள் முன்பே இருந்தவர்கள் செய்த தவறை திருத்தும் முயற்சியை ஏற்கனவே தொடங்கி விட்டோம். அதற்கான கடின முயற்சியில் இறங்கியுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT