கோப்புப்படம் 
இந்தியா

மாநகராட்சி தேர்தல்: தில்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவைகள்!

தில்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அன்றைய தினம் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

தில்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அன்றைய தினம் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

தில்லி மாநகராட்சியின் 250 வார்டுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. 

டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ள தில்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு 
அன்றைய தினம் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து முனைய நிலையங்களிலிருந்தும் அதிகாலை 4 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அதன்பின்னர் நாள் முழுவதும் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று மாநகராட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை மீரா மிதுன் கைது!

கேப்டன் பொறுப்பை எளிதாக்கிய முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா: ஷுப்மன் கில்

சிகப்பு நிலவு... சாக்ஷி அகர்வால்!

பூவே... கீர்த்தி சுரேஷ்!

பரிசுத்தம்.... கல்யாணி!

SCROLL FOR NEXT