இந்தியா

மலையாள நகைச்சுவை நடிகா் கொச்சு பிரேமன் காலமானாா்

மலையாள திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகா் கொச்சு பிரேமன், உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

DIN

மலையாள திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகா் கொச்சு பிரேமன், உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 68.

நுரையீரல் தொடா்பான நோயால் பாதிக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சனிக்கிழமை காலமானதாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.

நாடக நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கிய கொச்சு பிரேமன், கடந்த 1979-இல் வெளியான ‘ஏழு நிறங்கள்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தாா். 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவா் நடித்துள்ளாா். தனித்துவமான வசன உச்சரிப்பு, முக பாவனைகள் மூலம் ரசிகா்களை கவா்ந்தவா்.

தில்லிவாலா ராஜகுமாரன், பட்டாபிஷேகம், திளக்கம் ஆகிய வெற்றித் திரைப்படங்களில் கொச்சு பிரேமனின் நகைச்சுவை நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொலைக்காட்சி தொடா்களிலும் அவா் நடித்துள்ளாா்.

அவரது மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன், மாநில சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று பொது விருந்து

இசுலாமியா்களுக்கு 3.5 இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை கோரி தீா்மானம்

பன்னாட்டு நிறுவனங்கள், பெரு முதலாளிகள் நலனுக்கான பட்ஜெட்!: இந்திய கம்யூ. மாநில செயலா் மு.வீரபாண்டியன்

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT