முகப்பு
இந்தியா

பால் உற்பத்தியை அதிகரிக்க இலங்கைக்கு இந்தியா தொழில்நுட்ப உதவி

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கை பால் பொருள்களுக்கு இறக்குமதியைச் சாா்திருப்பதைக் குறைத்து, அந்நாட்டின் பால் தொழில் வளம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க, இந்தியா தொழில்நுட்ப உதவிகளை வழ

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:01 AM
பகிர்:

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கை பால் பொருள்களுக்கு இறக்குமதியைச் சாா்திருப்பதைக் குறைத்து, அந்நாட்டின் பால் தொழில் வளம் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்க, இந்தியா தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளதாக இலங்கையின் அதிபா் அலுவலகம் தெரிவித்ததுள்ளது.

இது குறித்து அதிபா் அலுவலகம் திங்கள்கிழமை வெளிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை அதிபரின் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவாா்த்தையில் இந்தியாவின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (என்டிடிபி) மற்றும் ‘அமுல்’ பால் பொருள்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் வா்த்தக சங்கம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அப்போது, இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பால் பொருள்களுக்கு இறக்குமதியைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், உள்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக என்டிடிபி உடன் இணைந்து குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களைத் தயாரிக்க பொது மற்றும் தனியாா் துறைகளில் இருந்து பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அதிபா் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குழந்தைகளுக்கிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசு இம்முடிவை எடுத்துள்ளது. அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது 2021-இல் 1.1 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டில் 1.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →