முகப்பு
இந்தியா

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:01 AM
கோப்புப்படம்
பகிர்:

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டியுள் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 

பின்னர் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் நோக்கி நகரும். டிச.8ஆம் தேதி காலையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திர கடற்கரையை யொட்டிய பகுதியை நோக்கி புயல் நகரக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே குமரிக் கடல் பகுதிகளிலிருந்து வடகேரளம் வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →