இந்தியா

குஜராத்தில் பாஜக; ஹிமாசலில் காங்கிரஸ் முன்னிலை!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகவும், ஹிமாசல பிரதேசத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தோ்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகின்றது.

காலை 9 மணி நிலவரப்படி குஜராத்தில் பாஜக 139, காங்கிரஸ் 29, ஆம் ஆத்மி 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. ஹிமாசலில் காங்கிரஸ் 38, பாஜக 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களிலும், ஹிமாசலில் அமைக்கப்பட்டுள்ள 68 வாக்கு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT