இந்தியா

இடைத்தேர்தல்: முலாயம் சிங் தொகுதியில் மருமகள் டிம்பிள் முன்னிலை

DIN

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. 

குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 

அதுபோல உத்தர பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவ் மறைவையொட்டி மெயின்புரி மக்களவைத் தொகுதி  இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். 

கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் மெயின்புரி தொகுதிக்கான வாக்கு எண்ணிகையும் இன்று(டிச. 8) நடைபெறுகிறது. 

இதில், பாஜக வேட்பாளர்கள் ரகுராஜ் சிங்கைவிட டிம்பிள் யாதவ் 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இதனால் அவர் மெயின்புரி தொகுதியைக் கைப்பற்றுவது உறுதியாகிறது. 

மெயின்புரி மக்களவைத் தொகுதியை சமாஜவாதி தொடர்ந்து கைப்பற்றுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT