இந்தியா

பஞ்சாபில் பரபரப்பு... காவல் நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்!

எல்லோயோர மாநிலமான பஞ்சாபில் காவல் நிலையம் மீது சனிக்கிழமை அதிகாலை ராக்கெட் எறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

DIN

எல்லோயோர மாநிலமான பஞ்சாபில் காவல் நிலையம் மீது சனிக்கிழமை அதிகாலை ராக்கெட் எறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என காவலர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானையொட்டி உள்ள தரன்தரன் மாவட்டம் அமிர்தசரஸ்-பதிண்டா நெடுஞ்சாலையில் உள்ள சக்ராலி காவல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலின் போது காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் சிங் மற்றும் பல காவலர்கள் பணியில் இருந்தர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக ராக்கெட் எறிகுண்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடிக்காததால் எந்தவித உயிரிழப்பு போன்ற என்ற அசம்பாவித சம்பங்களும் நிகழவில்லை. ராக்கெட் ஏறிகுண்டு வெடித்திருந்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும். இருப்பினும் காவல் நிலைய கட்டடத்திற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவும் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று கடந்த மாதம் மொகாலியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT