இந்தியா

ஆந்திரத்தில் வணங்கச் சென்ற பாஜக எம்பியை எட்டி உதைத்த பசு மாடு

ஆந்திரத்தில் பசுவை தொட்டு வணங்கச் சென்ற பாஜக எம்பியை அப்பசு எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஆந்திரத்தில் பசுவை தொட்டு வணங்கச் சென்ற பாஜக எம்பியை அப்பசு எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், குண்டூர் மிர்ச்சி ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலக திறப்பு விழாவுக்காக குண்டூர் மிர்ச்சி யார்டுக்கு எம்பி ஜிவிஎல் நரசிம்மராவ் நேற்று சென்றிருக்கிறார். அப்போது வீடு திறப்பு விழாவுக்காக கொண்டு வரப்பட்ட பசுவை தொட்டு வணங்க அதன் பக்கத்தில் அவர் சென்றுள்ளார்.

 பசுவை நரசிம்மராவ் தொட்டவுடன் அந்த பசு அவரை எட்டி உதைத்தது. பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய எம்பி, மீண்டும் அப்பசுவை தொட்டு வணங்க முயன்றார். ஆனால் அப்போதும் அப்பசு எகிறியது. உடனே சுதாகரித்துக் கொண்ட நரசிம்மராவ், அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இந்த விடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வணங்கச் சென்ற பாஜக எம்பியை பசு எட்டி உதைத்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT