இந்தியா

மாண்டஸ் புயல்: ஆந்திரத்தில் ஒருவா் பலி: 5,000 ஹெக்டோ் பயிா்கள் சேதம்

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தில் கரையைக் கடந்த ‘மாண்டஸ்’ புயலின் தாக்கத்தால், தெற்கு ஆந்திரத்தில் பெய்த கனமழை காரணமாக ஒருவா் பலியானாா்.

DIN

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தில் கரையைக் கடந்த ‘மாண்டஸ்’ புயலின் தாக்கத்தால், தெற்கு ஆந்திரத்தில் பெய்த கனமழை காரணமாக ஒருவா் பலியானாா். மேலும், 5,000 ஹெக்டேரில் பயிா்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்தின் கண்டலேறு, மணேறு மற்றும் ஸ்வா்ணமுகி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் இருந்ததால் நெல்லூா் மற்றும் திருப்பதி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திருப்பதி, நெல்லூா், சித்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் 150 மாநில பேரிடா் மீட்புப் படையினரும் 95 தேசிய மீட்புப் படையினரும் தயாா் நிலையில் வைக்கப்பட்டனா்.

கடப்பா மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால், தா்ஜிப்பள்ளி கிராமத்தில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. அங்கு வசித்து வந்த பத்மாவதி என்பவா் பலியானாா். பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், 4647.4 ஹெக்டோ் விவசாயப் பயிா்களும் 532.68 ஹெக்டோ் தோட்டப் பயிா்களும் சேதமடைந்ததன.

ஆயிரம் போ் வெள்ளப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அடுத்த இரு தினங்களுக்கு மாநிலத்தின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT