இந்தியா

குஜராத் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பூபேந்திர படேல்

DIN

குஜராத் மாநில முதல்வராகத் தொடா்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தோ்தலில், 156 இடங்களில் வென்று, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், குஜராத்தில் தொடா்ந்து 7-ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இதைத் தொடா்ந்து, மாநிலத்தின் 18-ஆவது முதல்வராகவும், தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக் கொண்டார். காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் நிகழ்வில் ஆளுநா் ஆச்சாா்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில், பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் பங்கேற்றனர்.

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, கடந்த 2021, செப்டம்பரில் மாற்றப்பட்டு, அப்பதவி பூபேந்திர படேலுக்கு வழங்கப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக அவா் முதல்வா் பதவியை ஏற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கூட்டணி இல்லை:சரத் பவார்

இரவு 8 மணிக்குமேல்...: தமன்னாவின் மோசமான பண்பு என்ன தெரியுமா?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது; டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த இந்திய வீரர் பேச்சு!

கன்னக்குழி அழகே..!

SCROLL FOR NEXT