பிரதமர் மோடியின் தலைமையில் குஜராத் வரலாறு படைத்தது: சோனோவால்  
இந்தியா

பிரதமர் மோடியின் தலைமையில் குஜராத் வரலாறு படைத்தது: சோனோவால் 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என்று மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சர்பானந்த சோனோவால் திங்கள்கிழமை தெரிவித்தார். 

ANI

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என்று மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சர்பானந்த சோனோவால் திங்கள்கிழமை தெரிவித்தார். 

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவுக்கு வந்தபோது, அசாம் முன்னாள் முதல்வர் அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக மாறும் என்பது உறுதி. 

கடந்த 60 ஆண்டுகளாக வெவ்வேறு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியைக் கையாண்டது. இவ்வளவு காலம் வாய்ப்பு கிடைத்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 

பிரதமர் மோடி தலைமையில் 2024-ல் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். இந்திய மக்கள் இனி பிரதமர் மோடியை மட்டுமே ஆதரிப்பார்கள் என்று சோனோவால் நம்பிக்கை தெரிவித்தார். 

காந்திநகரில் உள்ள புதிய தலைமைச் செயலகத்தில், குஜராத்தின் 18வது முதல்வராக பூபேந்திர பட்டேல் இன்று பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

SCROLL FOR NEXT