இந்தியா

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு தேதி விரைவில்

DIN

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் அது தொடர்பான அறிவிக்கை விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகவிருக்கிறது.

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு அட்டவணை மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.

விரைவில் இது தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை பெற சான்டெஸ் (SANDES) தேசிய டெஸ்ட் அப்யாஸ் என சில செயலிகளும் உள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்வதன் மூலம் மாணவர்கள் எளிதாக பல முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி உள்ளிட்ட மத்திய பொறியியல்-தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு ஜேஇஇ தோ்வு நடத்தப்படுகிறது. 

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு (மெயின்) மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரண்டு நிலைகளாக இந்தத் தோ்வு நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஓா் ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும்.

முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT