இந்தியா

ராகுல் காந்தி நடைபயணத்தில் ஹிமாசல் முதல்வர், எம்எல்ஏக்கள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் ஹிமாசல பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் ஹிமாசல பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ(இந்திய ஒற்றுமை) நடைப்பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து 97வது நாளாக ராஜஸ்தானில் நடைபெற்று வருகின்றது.

இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், மாநில தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நடிகர் - நடிகைகள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்று ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹிமாசல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற நிலையில், வரும் டிசம்பர் 16ஆம் தேதி 100-வது நாள் நடைப்பயணத்தில் மாநிலத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் மொத்தம் 150 நாள்கள் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 100 நாள்களை கடந்து சாதனை படைக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT