இந்தியா

பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் வரை, ஒரு அங்குல நிலத்தையும் கைப்பற்ற முடியாது: அமித்ஷா 

நரேந்திர மோடி அரசு ஆட்சியில் இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தையும் யாராலும் கைப்பற்ற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். 

PTI

நரேந்திர மோடி அரசு ஆட்சியில் இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தையும் யாராலும் கைப்பற்ற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். 

இதுகுறித்து நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஷா கூறுகையில், 

ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் வெளிநாட்டு பங்களிப்பு குறித்த கேள்விகளைத் தவிர்ப்பதற்காக எல்லைப் பிரச்னையை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பியதாகக் கூறினார். 

ராஜீவ் காந்தி அறக்கட்டளை(ஆர்ஜிஎஃப்), சீன தூதரகத்திலிருந்து ரூ.1.35 கோடி பெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். இது வெளிநாட்டு பங்களிப்பு விதிகளின்படி இல்லாததால் அதன் பதிவு ரத்து செய்யப்பட்டது என்றார்.

நேரு சீனா மீது கொண்ட அன்பின் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர இடம் தியாகம் செய்யப்பட்டது. 

இந்திய வீரர்களின் வீரத்தை அவர் பாராட்டினார். 

நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் வரை, எங்களின் ஒரு அங்குல நிலத்தையும் யாராலும் கைப்பற்ற முடியாது என்று ஷா கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT