கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகள் கொலை: மத்திய இணையமைச்சர் பதில்

கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 9 பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

DIN

கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 9 பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜம்மு காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளித்தார். அப்போது அவர் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 9 பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

2022 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தலா 4 பண்டிட்டுகளும், 2020ஆம் ஆண்டு ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மேம்பாட்டிற்கு ரூ.2815 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

2019-20ஆம் ஆண்டில் ரூ.1267 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.611 கோடியும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.936.095 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புன்னகை பட்டு... பிரக்யா நாக்ரா!

மல்லிகை மொட்டு... அனுபமா பரமேஸ்வரன்!

டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்குமா? என்ன செய்யப் போகிறார்? இன்னும் சில நாள்களே!

பிகாரில் நிதீஷ் குமார், லாலு பிரசாத்துக்கு வாக்களித்து மக்கள் 35 ஆண்டுகளை வீணத்துவிட்டார்கள்! -ஓவைசி

அழகு பதுமை.. ராஷி கண்ணா!

SCROLL FOR NEXT