ஆசிட் வீசிய குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்: கேஜரிவால் 
இந்தியா

ஆசிட் வீசிய குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்: கேஜரிவால்

ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

DIN


ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

தில்லியின் துவாரகா மோர் அருகே 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது. முகத்தில் பலத்த காயங்களுடன் மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மாணவியின் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அமில வீச்சால் மாணவியின் முகத்தில் 8 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் கேஜரிவாலின் சுட்டுரை பதிவில், 

இதை சகித்துக்கொள்ள முடியாது. எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். தில்லியில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணையத்தின் (என்சிடபிள்யூ) தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போகிப் பண்டிகையின்போது சேகரமாகும் கழிவுகளை தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழப்பு

வீட்டு வசதி வாரியம் பயன்படுத்தாத 16 ஆயிரம் ஏக்கா் நிலம் உரியவா்களிடம் ஒப்படைப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

ஜனவரி 16-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அதிமுக உறுப்பினா்கள் தா்ணா

SCROLL FOR NEXT