இந்தியா

என்னை யாரும் அரசியலில் இருந்து ஒழிக்க முடியாது: எடியூரப்பா

DIN

தன்னை அரசியலில் இருந்து யாரும் ஒழித்துக் கட்ட முடியாது என பாஜகவைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

பாஜகவால் தான் புறக்கணிக்கப்படுவதாகக் கூறுவதையும் அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: நான் பாஜகவால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. நான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறேன். நான் தற்போது கூட அரசியல் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாவட்டத் தலைமயகத்துக்கு செல்கிறேன். அந்த நிகழ்வில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கட்சியில் இருந்து என்னைப் புறக்கணிக்க நினைப்பதாக வெளியாகி வரும் தகவல் உண்மை இல்லை. யாரும் யாரையும் ஒழித்துக்கட்ட முடியாது. எனக்கு என்னுடைய சொந்த செல்வாக்கு இருக்கிறது. நான் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவர கடுமையாக உழைத்துள்ளேன். அது கர்நாடக மாநிலம் முழுமைக்கும் தெரியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT