FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். 

1 பிப்ரவரி 2024, 4:37 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். 

ஜம்மு-காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் இன்று அதிகாலை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 2 பேர் பலியானார்கள்.

தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு காவல்துறை, பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்தனர். 

Advertisement

Advertisement

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஜம்மு-பூஞ்ச் ​​தேசிய நெடுஞ்சாலையை மறித்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments