ஆணும் பெண்ணும் சேர்ந்து அமரக் கூடாது! தடை விதித்த வழிபாட்டுத் தலம்
மதிய உணவு, நொறுக்குத் தீனி என எதுவும் எடுத்துவரக் கூடாது: வரலாற்றுப் புகழ் பெற்ற ஜாமியா மஸ்ஜித் மசூதி அறிவிப்பு
ஸ்ரீநகர்: வரலாற்றுப் புகழ் பெற்ற ஜாமியா மஸ்ஜித் மசூதியில் ஆணும் பெண்ணும் சேர்ந்து அமரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மசூதி வளாகத்தில் புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய ஜாமியா மஸ்ஜித்தின் அஞ்சுமன் அக்வாஃப் விடுத்துள்ள அறிக்கையில், மசூதி வளாகத்தில் புகைப்படக் கருவிகள் எடுத்து வருவதற்கு அனுமதியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க | நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் எத்தனை?
Advertisement
Advertisement
வளாகத்தில் புகைப்படக் கருவிகளைக் கொண்டு எதையும் புகைப்படம் எடுக்கக்கூடாது. மேலும், வளாகத்திலுள்ள படங்களை புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை. அவ்வாறு கருவிகளைக் கொண்டுவருபவர்கள் வாயிலிலேயே நிறுத்தப்படுவார்கள்.
அதேபோன்று உணவுப் பொருள்களை மசூதி வளாகத்தில் எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகிறது. மதிய உணவு, நொறுக்குத் தீனி என எதுவும் எடுத்துவரக் கூடாது.
மசூதியினுள் வரும் பெண்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வர வேண்டும். ஆண்களுடன் அமரக் கூடாது.
14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்காணிக்க மசூதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.