உத்தரப் பிரதேசத்தில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியது.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமை தீயணைப்பு அதிகாரி தீபக் ஷர்மா கூறுகையில், பாதுகாப்பு உபகரணங்களுக்கு எந்த அனுமதியும் இல்லாமல் தொழிற்சாலை சட்டவிரோதமாக இயங்கி வந்திருக்கிறது.
இந்த தொழிற்சாலைக்குள் எல்பிஜி சிலிண்டர்களும் இருந்தன. அவற்றில் ஏதேனும் வெடித்திருந்தால் பெரிய அளவு சம்பவம் நிகழ்ந்திருக்கும். தொழிற்சாலை உரிமையாளர் மீது எஃப்ஐஆர் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.