பாட்னா: கள்ளச்சாராயம் குடித்தால் உயிரிழப்புதான் ஏற்படும் என்று கூறியிருக்கும் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், குடித்துவிட்டு பலியானால் இழப்பீடு வழங்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை, பிகார் சட்டப்பேரவையில் உரையாற்றிய மாநில முதல்வர் நிதீஷ் குமார், குடித்துவிட்டு பலியானால், இழப்பீடு வழங்க முடியாது. நாங்கள் சொல்வது என்னவென்றால், குடித்தால் செத்துப்போவீர்கள். குடிப்பதற்கு ஆதரவாகப் பேசுபவர்கள், மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யப்போவதில்லை என்றும் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. ''தோற்றால் பரவாயில்லை''.. மனைவியிடம் ரூ.10,000 கடன் வாங்கித் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ்
நேற்று செய்தியாளர்களிடம் சப்ரா கள்ளச்சாராய சம்பவம் பேசிய நிதீஷ் குமார், கள்ளச்சாராயம் குடிக்கும் எவர் ஒருவரும் செத்துப்போவார்கள் என்று காட்டமாகக் கூறினார்.
பிகாரில் மதுவுக்கு தடை விதித்திருப்பதற்கு ஆதரவாக பேசியிருக்கும் நிதீஷ் குமார், மாநிலத்தில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் ஏராளமான மக்கள் பயன்பெற்றுள்ளனர். பலர் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.