நள்ளிரவு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் உடல் கருகி பலி
தெலங்கானாவில் நள்ளிரவு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானாவில் நள்ளிரவு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் மன்சேரியல் மாவட்டத்தில் ராமகிருஷ்ணாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாபூர் கிராமத்தில் பத்மா என்பவரது வீட்டில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
Advertisement
Advertisement
நள்ளிரவு 12-12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.