கோப்புப்படம் 
இந்தியா

ஷாருக்கான் பாடலுக்கு கத்தியுடன் நடனமாடிய 5 பேர் கைது

ஷாருக்கான் பாடலுக்கு கையில் கத்தியை அசைத்துக்கொண்டு நடனமாடிய 5 பேரை இந்தூரில் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். 

DIN

ஷாருக்கான் பாடலுக்கு கையில் கத்தியை அசைத்துக்கொண்டு நடனமாடிய 5 பேரை இந்தூரில் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். 

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நேற்று ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஷாருக்கானின் 'திரிமூர்த்தி' படத்திலிருந்து 'போல் போலே போல்' எனும் பாடல் ஒலித்திருக்கிறது. அப்போது அப்பாடலுக்கு அங்கிருந்த சிலர் தங்கள் கைகளில் கத்தியை அசைத்துக்கொண்டு நடனமாடியுள்ளனர். 

இந்த கத்தியின் நீளம் சுமார் ஒன்றரை அடி எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த விடியோ இணையதளங்களில் வைரலானது. இதனைக் கண்ட போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதன்பேரில் 5 பேரை கைது செய்து அவர்கள் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைதானவர்களில் இருவர் சிறார்கள் என போலீசார் தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வெள்ளிக்கிழமை, பிறந்தநாள் விழாவை கொண்டாடும் ஐந்து இளைஞர்கள் கையில் கத்தியுடன் நடனமாடும் விடியோ போலீசாருக்கு கிடைத்தது. அவர்கள் மீது ஆயுதச்சட்டம் பிரிவு 25ன் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களில் இருவர் சிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT