இந்தியா

கலாசாரத்தைப் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு: தமிழக அரசு

DIN

கலாசாரத்தைப் பாதுகாக்கவே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டது.

ஜல்லிக்கட்டு வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், நாட்டு மாடு, காளை இனத்தை பாதுகாக்கவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

காளைகளின் உயிர், நல்வாழ்வை உறுதி செய்யும் விதமாக விதிமுறைகள் கடைபிடித்தே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் விவகாரத்தில் அரசியல் சாசன அமா்வு முன் இன்று தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இந்த விவகாரத்தை கடந்த சில தினங்களாக விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT