நடுங்க வைக்கும் குளிர்: சந்தைகளில் குவியும் காஷ்மீர் மக்கள் 
இந்தியா

நடுங்க வைக்கும் குளிர்: சந்தைகளில் குவியும் காஷ்மீர் மக்கள்

காஷ்மீரில் கடுமையான குளிர்நிலவுவதால், குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஏராளமான மக்கள் சந்தைகளில் போர்வைகளை வாங்க குவிந்து வருகிறார்கள்.

PTI

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடுமையான குளிர்நிலவுவதால், குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஏராளமான மக்கள் சந்தைகளில் போர்வைகளை வாங்க குவிந்து வருகிறார்கள்.

வழக்கமாக, குளிர்காலத்தில் காஷ்மீரில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரிக்கும் கீழே குறைவது வழக்கம். திங்கள்கிழமையன்று பகல்காமில் 4.8 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைந்துவிட்டது.

கடும் பனி மற்றும் குளிரிலிருந்து காத்துக் கொள்ள, ஏராளமான மக்கள் போர்வைகள், தலையை மூடும் குல்லா, கம்பளி ஆடைகளை வாங்குவதற்கு சந்தைகளில் குவிந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை முன்னிட்டு, சந்தைகளிலும் விதவிதமான போர்வைகளும் கம்பளி ஆடைகளும் வந்து குவிந்துள்ளன. பலரும் தங்களுக்கு ஏற்ற வகைகளில் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

பொதுவாக வெப்ப நிலை குறையும் போது பலருக்கும் தலைவலி ஏற்படும். அதனைப் போக்க தலைக்கு கம்பளி குல்லா அணிவது வழக்கம். கழுத்தைச் சுற்றிப் போடும் மப்ளர்கள், கையுறை, காலுறை போன்றவற்றையும் மக்கள் வாங்கிச் செல்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT